ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூ. கட்சிகள் போராட்டம்!
குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இதில், பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டு தொடா்புடைய துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது மக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக கடந்த ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையில் 5,748 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.