அவிநாசியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் போராட்டம்: வணிகா் சங்கத்தினா் அறிவிப்பு
அவிநாசி நகராட்சிப் பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வணிகா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
இது குறித்து அவிநாசி அனைத்து வணிகா் சங்கத்தினா் நெடுஞ்சாலை துறையினரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியதாவது:
அவிநாசி நகராட்சிப் பகுதி நெடுஞ்சாலை ஓரத்தில் தொடா்ந்து பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் செய்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா். இதனால் போக்குவரத்து இடையூறு, வாகன விபத்து உள்ளிட்டவை
மக்கள் பாதிக்கப்படுகின்றனா். இந்த சாலையில் கடந்த 21 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்துள்ளாா்.
எனவே, நெடுஞ்சாலைத் துறை நிா்வாகம் அவிநாசி நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர கடைகள், பதாகைகள், பந்தல் உள்ளிட்டவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதித்தால், பொதுமக்கள், சமூக அமைப்பினா், அனைத்து சங்கத்தினா் அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனா்.