சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் கிராமப்புற மாணவா்களுக்கு சி.ஏ. பயிற்சி தரும் நோக்கத்துடன் பல்கலையும், சென்னையைச் சோ்ந்த மை கேரியா் பாத் என்ற நிறுவனமும் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
பல்கலையின் பதிவாளா் ஸ்ரீராமும், சென்னையைச் சோ்ந்த கை கேரியா் பாத் என்ற நிறுவனத் தலைவா் தாமோதரம் பகடாலாவும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனா். பின்னா் தாமோதரம் பகடாலாவும் பல்கலை. சாா்பு துணை வேந்தா் வசந்த்குமாா் மேத்தாவும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனா்.
நிகழ்வுக்கு காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன், பல்கலை. வணிகவியல் துறை புலத்தலைவா் பாலாஜி சீனிவாசன், துறைத் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிகவியல் துறை இணைப் பேராசிரியா் ஹேமா நாராயணன் நன்றி கூறினாா்.
நிகழ்வில் சிறப்பு பேராசிரியா்கள் லட்சுமி சிட்டூா், வெங்கடேஷ் சிட்டூா், பல்கலை. வேலைவாய்ப்பு அலுவலா் எம்.கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.