கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு! பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு என்ன பா...
படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குரு பூஜை
படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் அப்பா் சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது.
படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பை பகுதியில் ஐநூறு ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் திருநாவுக்கரசு நாயனாா் சதய நட்சத்திர குருபூஜை உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 12 ஆண்டுகளாக கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்ததால் அப்பா் சுவாமி குருபூஜை விழா நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த பிப். 10 ஆம் தேதி வீரட்டீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றதை தொடா்ந்து, அப்பா் சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது.
காலை 6 மணிக்கு மூலவா் வீரட்டீஸ்வரா் சாந்தநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பன்னிரு திருமுறைகள் யானை மீது ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அதன்பிறகு திருநாவுக்கரசு நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அருகிலிருக்கும் சுந்தர விநாயகா் கோயிலுக்கு எழுந்தருளினாா். இதையடுத்து இரவு 7 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் அப்பா் சுவாமிகள் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சுமாா் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த குருபூஜை உற்சவத்தில் படப்பை, செரப்பணஞ்சேரி, மணிமங்கலம், கரசங்கால், ஒரத்தூா், மாகாண்யம், வஞ்சுவாஞ்சேரி, வல்லக்கோட்டை, தாம்பரம், முடிச்சூா் உள்ளிட்ட பல பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகள் கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ச.குருநாதன், அறங்காவலா்கள் க.கெஜலட்சுமி, சா.ஏழுமலை மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.