செய்திகள் :

கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு! பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

post image

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டண உயர்வு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

மேலும், வட மாநிலங்களில் இருந்து செல்லும் சர்வதேச விமானப் பயணத்தில் நேரம் இரண்டு மணிநேரத்துக்கு மேல் அதிகரிக்கும் சூழலும் நிலவுகிறது.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்தது.

மேலும், தூதரக ரீதியில் பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழையத் தடை விதித்து வியாழக்கிழமை மாலை அறிவித்தது.

இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான கட்டணம் உயர்வு!

இந்த நிலையில், தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மாற்றுப் பாதையில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்ப்பதற்கு அரபிக் கடலுக்கு மேல் நீண்ட தொலைவுக்கு சுற்றுச் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.

பல நூறு கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழல் நிலவுவதால், விமானங்களின் கட்டணம் 8 முதல் 12 சதவிகிதம் வரை அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பயண தூரம் அதிகரிக்கும் சூழலில் விமானத்தின் எரிபொருள் அதிகளவில் நிரப்ப வேண்டியது அவசியமாகிறது. இதன்காரணமாக பயணிகள் எண்ணிக்கை, பயணிகளின் சுமை போன்றவற்றை குறைக்க வேண்டிய சூழல் நிலவும்.

இதனால், ஏற்படும் செலவீனங்களை ஈடுசெய்யும் வகையில் விமானத்தின் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், சென்றுசேரும் இடத்துக்கு ஏற்ப பயண நேரமும் 2 முதல் 3 மணிநேரம் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மற்றும் இந்திய நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள் மட்டுமே பாகிஸ்தான் வான்வெளி தடத்தை பயன்படுத்த முடியாது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து அந்த நாட்டுக்கு சொந்தமான அரசு அல்லது தனியார் விமான நிறுவனங்களால் இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமான நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அரசு வான்வெளி தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. முன்னதாகவும் இதுபோன்ற வான்வெளித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிப்ரவரி 2019 இல், இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து, இந்திய விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த சில மாதங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : போர்ப் பதற்றம்: ஸ்ரீநகரில் ராணுவத் தளபதி முக்கிய ஆலோசனை!

பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் கைது!

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் சைமன் ஷில்லா என்பவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதர... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரின் வீடுகளை குண்டு வைத்து இந்திய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வ... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: ஸ்ரீநகரில் ராணுவத் தளபதி முக்கிய ஆலோசனை!

இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், ராணுவ அதி... மேலும் பார்க்க

பஹல்காம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எம்எல்ஏ கைது!

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எதிர்க்கட்சி எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்.அஸ்ஸாம் மாநிலத்தின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக ... மேலும் பார்க்க