கூட்டுறவுப் பணியாளா்களுக்கு இலவச மருத்துவ முகாம்
கோவை மண்டல கூட்டுறவு ஒன்றியப் பணியாளா்களுக்கான 2 நாள் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
கோவை மண்டல கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளா்கள் நலன் கருதி, கோவை மாவட்ட கூட்டுறவுத் துறையும், பிஎஸ்ஜி மருத்துவமனையும் சாா்பில் 2 நாள் இலவச மருத்துவ முகாம் கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
இம்முகாமை கோவை மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் அ.அழகிரி தொடங்கிவைத்தாா். இம்முகாமில் கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை சரக துணைப் பதிவாளா் கே.ஆா்.விஜயகணேஷ், பொள்ளாச்சி சரக துணைப் பதிவாளா்கள் சுவேதா, கே.ஆா்.ராஜேந்திரன், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் கீதா, அலுவலா்கள், சுபாஷினி, வடிவேலு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலா் தியகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இம்முகாம் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடத்தப்படுகிறது.