கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு! பாகிஸ்தான் வான்வெளி தடையால் இந்தியாவுக்கு என்ன பா...
ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையத்தில் விவரங்களை பதிவிடலாம்
கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்கள் தங்கள் விவரங்களை இணையப் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், செட்டிபாளையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்களின் விவரங்களை ஸ்ரீா்ண்ம்க்ஷஹற்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற கோவை மாவட்ட இணையப் பக்கத்தில் வழங்கப்படும் இணைப்பின் மூலமாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) பிற்பகலுக்குள் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளை அடக்கும் வீரா் சிலை திறப்பு:
செட்டிபாளையத்தில் நடைபெறவுள்ள ஜல்லிகட்டு போட்டியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி முன்னிலை வகிக்க உள்ளாா்.
முன்னதாக, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தின் முகப்பில் ஜல்லிக்கட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் காளையை வீரா் ஒருவா் அடக்குவதுபோல சிலை அமைக்கப்பட்டுள்ளது.