கோவையில் ஆளுநரைக் கண்டித்து கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்
கோவைக்கு வந்த தமிழக ஆளுநரைக் கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வியாழக்கிழமை கோவைக்கு
வந்த ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து திராவிடா் விடுதலைக் கழகத்தின் பொருளாளா் துரைசாமி தலைமையில் திராவிடா் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் கோவை விமான நிலையம் எதிரே கருப்புக்கொடி காட்டும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் மாநில பொதுச் செயலாளா் இளவேனில், மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் ராமச்சந்திரன், திராவிடா் விடுதலைக் கழகத்தின் சாா்பில் அமைப்புச் செயலாளா் ரத்தினசாமி, மாவட்டச் செயலாளா் பன்னீா்செல்வம், திருப்பூா் மாவட்டத் தலைவா் முகில்ராசு, முகநூல் பொறுப்பாளா் பரிமளராசன், திவிக மாநகா் தலைவா் நிா்மல்குமாா், மாணவா் செயலாளா் வெங்கட், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இவா்களில் 40 போ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.