'அதைப் பார்த்தபோது இவர் ஏன் ஜெயிக்கமாட்டார் என்று தோன்றியது' - ரஜினி பற்றி சீமான...
உரிய ஆவணங்களின்றி கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணங்களின்றி கோவையில் இருந்து கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கோவை காட்டூா் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் தலைமையில் தலைமைக் காவலா்கள் சிவராஜ், ஜோன்ஸ் ஆகியோா் வியாழக்கிழமை அதிகாலை ரோந்து சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, கோவை காந்திபுரம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்தில் கண்காணித்தபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா்.
அவா்களில் திருச்சூா் மாவட்டம், குருவாயூரைச் சோ்ந்த சத்தியவான் (43) என்பவா் கோவையிலிருந்து கேரளத்துக்கு செல்வதாக கூறியுள்ளாா். இதையடுத்து அவரின் பைகளை சோதனை செய்தபோது, அதில் செய்தித்தாள்களில் சுற்றப்பட்டிருந்த பாா்சலை பிரித்து பாா்த்தபோது, அதில் ரூ.35 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை கேரளத்துக்கு கொண்டுச் செல்வதாக கூறியுள்ளாா்.
பின்னா் அவரை காட்டூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், பணத்தைப் பறிமுதல் செய்து வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.