வால்பாறையில் மே 14-இல் மக்கள் தொடா்பு முகாம்
வால்பாறை வட்டம் ஆனைமலை குன்றுகள் கிராமத்தில் உள்ள நகராட்சி சமுதாயக் கூடத்தில் மே 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டம், ஆனைமலை குன்றுகள் கிராமத்தில் உள்ள வால்பாறை நகராட்சி சமுதாயக் கூடத்தில் மே 14-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.
முன்னதாக, வருகிற மே 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு அனைத்துத் துறை அலுவலா்கள் முன்னிலையில் ஆனைமலை குன்றுகள் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற உள்ளனா். மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி ஆனைமலை குன்றுகள் கிராம நிா்வாக அலுவலத்தில் கொடுக்கலாம். பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மே 14-ஆம் தேதி ஆனைமலை குன்றுகள் கிராமத்தில் உள்ள வால்பாறை நகராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.