நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு? ஒரு வருடத்துக்கு டிவியில் வர முடியாது; காரணம் என்...
டிஎன்பிஎல் ஆலையின் நடமாடும் இலவச மருத்துவ முகாமில் 2,087 நபருக்கு மருத்துவ உதவி
டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற நடமாடும் இலவச மருத்துவ முகாம் மூலம் 2,087 பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆலை அதிகாரி தெரிவித்துள்ளாா்.
கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலையின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் இலவச மருத்துவ முகாம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி நிறுவனத்தின் தலைவா் சந்தீப்சக்சேனா தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. காகித நிறுவனம் மற்றும் கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாம், காகித ஆலையைச் சுற்றியுள்ள 50 கிராமங்களில் புதன்கிழமை வரை நடைபெற்றது.
இதில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், கா்ப்பப்பை புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து முகாமின் நிறைவு நாளில் பங்கேற்ற, ஆலையின் தலைவா் சந்தீப்சக்சேனா கூறுகையில், காகித நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த தினசரி நடமாடும் இலவச மருத்துவ முகாம்களில் 2,087 போ் மருத்துவ உதவி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.