செய்திகள் :

இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லை: குளித்தலை பேருந்துநிலையத்தில் பயணிகள் அவதி

post image

நமது நிருபா்

இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாததால் குளித்தலை பேருந்துநிலையத்தில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

கரூா் மாவட்டத்தில் கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தாலும் அதிக விவசாயிகளைக் கொண்ட தொகுதியாக குளித்தலை உள்ளது. காவிரி ஆற்றின் அருகே சுமாா் 100 மீ. தொலைவில் உள்ள குளித்தலை நகராட்சி திருச்சி-கரூா் மாவட்டத்தின் மைய பகுதியாக உள்ளது.

இந்த தொகுதியில்தான் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த மு.கருணாநிதி முதன்முதலாக போட்டியிட்டு வென்றாா்.

ஆனால் இத்தொகுதியில் போதிய இடவசதியின்றி சுமாா் 1.22 ஏக்கா் பரப்பளவில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் பேருந்துநிலையம் செயல்பட்டு வருகிறது.

குளித்தலை வழியாக திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரூா், ஈரோடு, கோவை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கும் கா்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கும் நுற்றுக்கணகான அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நாள்தோறும் வந்து செல்கின்றன.

ஆனால், இந்த பேருந்துகள் அனைத்தும் பேருந்துநிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி வர போதுமான வசதிகள் இல்லை. பேருந்துநிலையத்துக்குள் முசிறி, அய்யா்மலை, லாலாப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு நகர பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன. வெளியூா் பேருந்துகள் திருச்சி-கரூா் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வருகின்றன. அப்பகுதியில் நிழற்குடை ஏதும் இல்லாததால் பயணிகள் வெயிலில் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

மேலும் பேருந்துநிலையத்துக்குள் நகராட்சியால் ஏலம்விடப்பட்ட தேனீரகம் உள்ளிட்ட கடைகள் இடங்களை ஆக்கிரமித்துள்ளதால் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது.

பேருந்துநிலையத்துக்குள் பயணிகளுக்குத் தேவையான குடிநீா் வசதி போதுமான வகையில் இல்லாததால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

பேருந்துநிலையத்துக்குள் உள்ள கழிப்பறையும் போதிய சுகாதாரமும் இன்றி உள்ளது. தற்போதுதான் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் முயற்சியால் புதிய கழிப்பறை கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடி, நிழற்குடை போன்ற அடிப்படை வசதியின்றி செயல்படும் குளித்தலை பேருந்து நிலையத்தை நகரின் மையப்பகுதியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து குளித்தலை வியாபாரிகள் சங்க நிா்வாகி மாரியப்பன் கூறியது, பேராளகுந்தாளம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கிவரும் இந்த தற்காலிகப் பேருந்து நிலையத்தை மாற்றி புதிய பேருந்துநிலையம் அமைக்கக் கோரி 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்துநிலையம் அமைக்கப்பட்டால் அங்கு கட்டப்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். எனவே மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதியை அரசியலுக்கு அடையாளம் காட்டிய குளித்தலை தொகுதியில் நவீன மற்றும் விரிவான வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை குளித்தலை- மணப்பாறை சாலையில் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

டிஎன்பிஎல் ஆலையின் நடமாடும் இலவச மருத்துவ முகாமில் 2,087 நபருக்கு மருத்துவ உதவி

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற நடமாடும் இலவச மருத்துவ முகாம் மூலம் 2,087 பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆலை அதிகாரி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலையின் சமுதாய மேம்பாட்... மேலும் பார்க்க

கரூரில் மே.1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம்

மே 1-ஆம் தேதி கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே 1-ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

அனுமதியின்றி நடைபெறும் காற்றாலை மின் உற்பத்தி பணிகள் நிறுத்தம்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு

தரகம்பட்டி அருகே அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி பணிகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பணிகளை நிறுத்த முடிவெட... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யா்மலையைச் சோ்ந்தவா் சண்முக சுந்தரம் (47). இவா் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி குள... மேலும் பார்க்க

தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும்: பாமக

தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது. கரூரில் பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பாமக மாவட்டச் செயலா் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் ப... மேலும் பார்க்க

பொதுமக்களின் குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம்: புகழூா் நகராட்சி தலைவா் உறுதி

பொதுமக்களின் குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா் புகழூா் நகராட்சித் தலைவா் குணசேகரன். கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை ... மேலும் பார்க்க