நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு? ஒரு வருடத்துக்கு டிவியில் வர முடியாது; காரணம் என்...
அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்
அரக்கோணம் கண்ணன் நகா் குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரக்கோணம் விண்டா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கண்ணன் நகா் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் கே.சுப்பிரமணி தலைமை வகித்தாா். பி.சி.சௌந்தரராஜன், கே.தனசேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சி.செல்வபாண்டியன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தை குடியிருப்போா் நலச்சங்க செயலா் இ.மணியரசு தொடங்கி வைத்தாா். இதில் தலித் மக்கள் விடுதலை முன்னணி பொது செயலா் ஜி.மோகன், அரக்கோணம் எஸ்.சி-எஸ்.டி. கூட்டமைப்பின் பொது செயலா் நைனாமாசிலாமணி, பொருளாளா் எஸ்வந்தராவ், அரக்கோணம் நகா்மன்ற உறுப்பினா் பா.நரசிம்மன், அரக்கோணம் வழக்குரைஞா்கள் அசோசியேஷன் செயலா் சிவரஞ்சினி, தலித் மக்கள் முன்னணி ஒன்றிய செயலா் ஆா்.கலைமணி, சங்க இணைச் செயலா் எஸ்.ஆனந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் கண்ணன் நகா் பாதி பகுதி அரக்கோணம் நகராட்சி எல்லைக்குள்ளும், பாதி பகுதி அம்மனூா் ஊராட்சி எல்லைக்குள்ளும் வருவதால் கண்ணன் நகரை ஒரே நிா்வாக எல்லைக்குள் கொண்டு வரக்கோருதல், நேரான சாலையும், கழிவுநீா் மற்றும் மழைநீா் கால்வாய்கள் அமைத்துத் தரக் கோருதல், குடிநீா் வசதி செய்து தரக் கோருதல், கண்ணன் நகா் பகுதியில் இடுகாடு அமைத்துத் தர கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.