`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
Real Estate: 'வீட்டின் அருகில் இருக்கும் சாலை 'இந்த' மீட்டரில் இருக்கிறதா?' - செக் செஞ்சுடுங்க!
பரபர வேலைகளை முடித்து வரும் நமக்கு, ஆசுவாசத்தையும், ஒருவித அமைதியையும் தருவது நமது 'வீடு'. அப்படிப்பட்ட வீட்டை நாம் கட்டும்போதோ அல்லது வாங்கும்போதோ மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கும்போது அல்லது வீட்டை வாங்குவதற்கு முன்பு, 'இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கோங்க' என்று அந்தக் கேள்விகளை அடுக்குகிறார் ரியல் எஸ்டேட் ஆலோசகர் மற்றேம் வழக்கறிஞர் முத்துசாமி.
> "நிலம் அல்லது வீட்டிற்கும், மெயின் ரோட்டிற்கும் எத்தனை தூரம்? போதிய சாலை போக்குவரத்து வசதி உள்ளதா ?

நிலத்தில் 'இந்த' வடிவம் வேண்டவே வேண்டாம்
> வீட்டின் அருகே கடைகள், பல்பொருள் அங்காடிகள், உணவு விடுதிகள், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை கூடம், சமுதாய கூடம், விளையாட்டு திடல், குழந்தைகள் பூங்கா, முதியவர் நடை மற்றும் ஓய்வு பூங்கா, மருந்தகம். மருத்துவமனைகள் பள்ளிக்கூடம், கல்லூரி போன்றவைகள் உள்ளதா?
> நிலத்தின் எல்லைகள் எங்கு உள்ளது? - இதில் மிக கவனம் வேண்டும்.
> நிலத்தின் வடிவம் என்ன? - சதுரம் அல்லது செவ்வக வடிவிலான இடமாக இருந்தால் தான் கட்டடத்திற்கு ஏதுவாக இருக்கும். முக்கோணம் போன்ற வேறு பிற வடிவம் கட்டடத்திற்கு செட் ஆகாது.
நிலத்திற்கு கீழே 'இது' வேண்டாம்
> வீடு கட்டப்போகும் அல்லது இருக்கும் நில மண்ணின் தன்மை என்ன? பாறை இருந்தால் அடித்தளத்திற்கு நல்லது தான். ஆனால், கிணறு, டேங்க், செப்டிக் டேங்க் போன்றவற்றை கட்டினால் சிக்கல் உருவாகும். அதனால், மண் மற்றும் நீர் ஆதார தன்மையை முன்னரே செக் செய்துகொள்ளுங்கள்.
> அந்த நிலத்தில் தண்ணீர் இருக்கிறது, எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது, அதன் பயன்பாட்டு தரம் என்ன?
> உங்கள் நிலத்திற்கு கீழ் உயர் அழுத்த மின்சார லைன் எதாவது போகிறதா? அப்படி இருந்தால் கட்டாயம் அந்த நிலம் வேண்டாம்.
> அந்த நிலம் ஏரிக்கரை, ஆற்றங்கரை அல்லது கால்வாய் நிலமா? - 'ஆம்' என்றால் அந்த நிலம் வேண்டவே வேண்டாம்.

கடலா...?
> நிலத்தின் அருகில் கடல் இருக்கிறது? இருந்தால், அந்த நிலம் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் பகுதியில் அல்லாமல் இருக்க வேண்டும்.
> நிலத்தின் அருகில் இருக்கும் ரோட்டின் அகலம் எவ்வளவு? ஒன்பது மீட்டருக்குள் இருக்கக்கூடாது.
> மின்சார வசதி எப்படி இருக்கிறது?
> மழைக்காலத்தில் அந்த இடத்தில் மழை நீர் வடிகால் போதிய வசதியுடன் உள்ளதா அல்லது நீர் தேங்குமா?
> மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி இருக்கிறதா?
> திடக்கழிவு மேலாண்மை அந்த இடத்தில் எப்படி இருக்கிறது?
பாதுகாப்பு எப்படி?
> கால்நடை மற்றும் கோழி பண்ணை, குப்பை கொட்டும் இடம், தொல்லியல் துறை அறிவித்த தளம், சுடுகாடு மற்றும் கல்லறை போன்றவை அருகில் இருக்கிறதா?
> அந்த இடம் குடியிருக்க பாதுகாப்பானதா?
> எதிர்காலத்தில் நிலத்தை சுற்றி வளர்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் எப்படி இருக்கும்?

போக்குவரத்து...
> நில மதிப்பின் ஏற்றம் எப்படி இருக்கும்?
> நிலத்திற்கு அருகாமையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் போன்ற போக்குவரத்து வசதி எவ்வளவு தூரத்தில் உள்ளது?
நிலமோ, வீடோ வாங்குவதற்கு முன்பு இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைத்தால்...
அப்புறம் என்ன... கெட்... செட்... கோ!"