செய்திகள் :

Real Estate: வீடு கட்டும்போதும், கட்டிமுடித்த பிறகும் கவனிக்க வேண்டிய செக்லிஸ்ட்டுகள் என்னென்ன?

post image

'வீட்டில் எத்தனை அறைகள் இருக்க வேண்டும்?', 'எத்தனை அடி இருக்க வேண்டும்?', 'என்ன கலர் பெயிண்ட் அடிக்க வேண்டும்?' என்று பார்த்துப் பார்த்து வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வோம். ஆனால், சின்ன, சின்ன விஷயங்களில் கோட்டைவிட்டு விடுவோம். பல பல சின்ன சின்ன விஷயங்கள் தான் நம் வீட்டை அழகாகவும், நமக்கு ஏற்றதாகவும் மாற்றும். அப்படியான ரேண்டம் டெக்னிக்குகளை வழங்குகிறார் தமிழ்நாடு ஃபிளாட் புரொமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர்.

"இப்போதெல்லாம் வெயில், மழை, குளிர் என எதுவும் இயல்பை விட, அதிகமாக இருக்கிறது. அவை மொட்டை மாடி வழியே நேராக வீட்டிற்குள் இறங்கும். இதைத் தடுக்க மொட்டை மாடியில் 'வெதர் கோட்டிங்' கொடுத்துக்கொள்வது நல்லது.

தமிழ்நாடு ஃபிளாட் புரோமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி. மணிசங்கர்

வீட்டின் ஜன்னல் அளவுகள், கதவின் அளவுகளைச் சரியாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இது ஃபிரிட்ஜ், பீரோ போன்ற பொருட்களை வாங்கும்போது மிகவும் உதவும். 'ஆசையாக இருக்கிறது' என்று இந்த அளவுகளுக்கு மீறி வாங்கிவிட்டால், அதை வீட்டிற்குள் எடுத்துச் செல்ல முடியாமல் போய்விடும். ஆனால், முன்னரே இவற்றைத் தெரிந்துகொள்வதன் மூலம் பிரச்னைகளைத் தடுக்கலாம்.

பால்கனி சுவர்கள் குறைந்தபட்சம் 3 1/4 அடியாவது இருக்க வேண்டும். அப்போது தான், அது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும். அப்படி ஒருவேளை இல்லையென்றால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

வீட்டின் சுவரின் கன அளவுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக, வீட்டின் வெளிப்புற சுவரின் கன அளவு 9 இன்ச்சும், உட்புற சுவர்கள் 4 1/2 இன்ச் அல்லது 6 இன்ச் இருக்கும். இதைத் தெரிந்துகொள்வதன் மூலம், எங்கு பெட் போடலாம், எங்கு டேபிள் வைத்துக்கொள்ளலாம் என்று அறையில் எங்கு என்ன வைக்கலாம் என்பதை முடிவு செய்ய உதவியாக இருக்கும்.

வீட்டிற்கு ஸ்விட்ச் போர்டுகள் வாங்கும்போது, லைட், ஃபேன் போன்ற அடையாளங்கள் இருப்பது போலப் பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது தேவையில்லாமல் வேறு ஸ்விட்ச் போடுவது, ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவதைத் தவிர்க்கலாம்.

எல்லா மெயினையும் ஆஃப் செய்துவிட்டு, மீட்டர் ஓடுகிறதா என்பதை செக் செய்யவும். 'ஓடவில்லை' என்றால் மீட்டர் சரியாக இருக்கிறது. 'ஓடினால்' மீட்டரை மாற்ற வேண்டும்.

வீட்டின் மெயின் கதவில் செயின் இருப்பது நல்லது. அப்போது யாராவது வெளியிலிருந்து கதவைத் திறக்க முயன்றால், இந்த செயின் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகுக் கதவைத் திறக்காமல் தடுத்து விடும்.

வீட்டு ஃபோளரிங்கில் கிரானைட் போட்டிருந்தால் 'சோப் ஆயில்' பயன்படுத்தாதீர்கள்.

வீட்டு ஃபோளரிங்கில் கிரானைட் என்றால்...

குளியலறை டைல்ஸ்களின் ஸ்பேர் டைல்ஸ்கள் குறைந்தபட்சம் பத்தாவது நம்மிடம் இருக்க வேண்டும். காலப்போக்கில் டைல்ஸ் உடையலாம் அல்லது ஏதாவது டேமேஜ் ஏற்படலாம். அப்போது நாம் பயன்படுத்தியிருக்கும் டைல்ஸ் தயாரிப்புகள் முற்றிலும் நின்றிருக்கும். இதைத் தவிர்க்க, ஸ்பேர் டைல்ஸ்கள் வைத்துக்கொள்வது நல்லது.

கிச்சன் டேபிள் டாப்பில் அடுப்பு வைத்திருக்கும் இரண்டு பக்கங்களிலும் குறைந்தபட்சம் 1 1/2 அடி இடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான், சமைத்து முடித்து பாத்திரம் இறக்கி வைக்க ஏதுவாக இருக்கும்.

டேபிள் டாப்பிற்கு, ஃப்ளோருக்கும் இடைவெளி சிலிண்டர் அளவை விடச் சற்று கூடுதலாக இருக்க வேண்டும். தரைக்குப் பள்ளமாக சிலிண்டர் வைக்கும் இடம் இருக்கக்கூடாது. அப்போது அந்த இடத்தில் தண்ணீர் சென்றுவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கதவு, ஜன்னல், கப்போர்டுகள் என அனைத்தின் ஹேண்டில்களுடைய ஸ்பேர்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

படுக்கையறையில் மஞ்சள் எல்.இ.டி விளக்கு நல்லது. அப்போது கண்ணுக்கு அதிக ஸ்ட்ரெயின் இருக்காது.

ஹாலை இடவசதியோடு அமைத்துக்கொள்ளுங்கள். தொலைக்காட்சிக்கும், நீங்கள் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் சோபாவிற்கும் இடையே 7 3/4 - 8 அடி தூரம் இருக்க வேண்டும்.

ஷூ ரேக் முடிந்தளவுக்கு மூடியிருப்பதுபோல அமைத்துக்கொள்ளுங்கள்.

படுக்கையறையில் இருக்கும் லாப்டுகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் ஏ.சியின் திறன் பாதிக்கப்படாமல் இருக்கும்.

லாப்டின் நீளம், அகலம் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ற மாதிரி, பொருட்களை அடுக்குங்கள்.

பெட்ரூமில்...

ஷீலிங் அடி கட்டாயம் 10 அடி இருக்க வேண்டும். ஜன்னலுக்கு மேலும், கீழும் 3 அடி இருக்க வேண்டும். அப்போதுதான் காற்றோட்டம் சம அளவில் இருக்கும்.

படுக்கையறையில் கண்டிப்பாக ஜன்னல் இருக்க வேண்டும். காற்றும், வெளிச்சமும் இதற்கான காரணங்கள்.

டைனிங் ஹாலில் பிரஞ்சு ஜன்னல்கள் இருப்பது நல்லது. நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டே உண்ண ரம்மியமாக இருக்கும்.

சுவரின் கலரும், கர்டெய்ன்ஸும் கிட்டதட்ட ஒரே நிறத்தில் இருக்க வேண்டும்.

வீட்டின் வெளியே வரைபடம் போலவும், அரசு ஒப்புதல் அளித்தபடியும் இருக்கிறதா என்பதை பொறியாளரை வைத்து செக் செய்துகொள்ளுங்கள்.

வீட்டின் அழகு வெளிப்புறத்தில் தான் அதிகம் உள்ளது. அதனால், அது பக்காவாகவும், அழகாகவும் இருப்பதுபோல பாருங்கள்" என்றார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

நிலத்துடன் சேர்த்து சொந்த வீடு... நாவலூரில் சொகுசு வில்லா!

டிராபிக் ஜாம், காற்று மாசு, நெரிசல் இப்படி எந்த தொந்தரவும் இல்லாம மனசை ரிலாக்ஸ் பண்ற மாதிரி இயற்கையை ரசிக்கக்கூடிய இடத்தில அமைதியான சூழல்ல ஒரு luxury வீடு இருந்தா அந்த உணர்வு எப்படி இருக்கும் தெரியுமா... மேலும் பார்க்க

DTCP, CMDA, பஞ்சாயத்து அப்ரூவல் ஏன் முக்கியம்.. அது இல்லையென்றால், என்ன செய்ய வேண்டும்?!

வீடு, நிலம் வாங்கும்போது அது பிடித்திருக்கிறதா, சரியான இடத்தில் இருக்கிறதா, அதன் மதிப்பு எதிர்காலத்தில் உயருமா, தண்ணீர், மின்சாரம் இருக்கிறதா என்பதையெல்லாம் தேடி தேடி பார்த்து வாங்குவோம். இத்துடன் DTC... மேலும் பார்க்க

'வீடு வாங்கப்போறீங்களா... கட்டப்போறீங்களா?!' - இந்த 3 விஷயங்கள் கட்டாயம்!

வீடு என்பது பெரும்பாலானவர்களின் பெரும் கனவு. பார்த்து பார்த்து வீடு கட்டுவோம் அல்லது வீடு வாங்குவோம். ஆனால், அதற்கு பின்னாலான ஆவணங்களை, சில விஷயங்களை மறந்துவிடுவோம் அல்லது சறுக்கி விடுவோம். அது குறித்... மேலும் பார்க்க