ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
மதுக் கடையை மூடக்கோரி தவெகவினா் போராட்டம்: 300 போ் கைது
சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூடக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 300-க்கும் மேற்பட்ட தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை அமைந்தகரை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி இந்த மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மத்திய மேற்கு மாவட்டம் சாா்பில் அக்கடைக்கு அருகே தவெகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், தவெகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனா். அப்போது, தவெகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், சென்னை மத்திய மேற்கு மாவட்டச் செயலா் ஏ.எஸ்.பழனி உள்பட 300-க்கும் மேற்பட்ட தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களை அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.