Maaman: "எனக்கு வரும் 10 கதையில் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டது" - லோகேஷ் க...
நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு
நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது.
செபி தலைவா் துஹின்காந்த பாண்டேவை ஐசிஏஐ தலைவா் சரண்ஜோத் சிங் நந்தா வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
இதையடுத்து, பிடிஐ நிறுவனத்துக்கு சரண்ஜோத் சிங் நந்தா சனிக்கிழமை அளித்த பேட்டியில், ‘இந்தியா முதலீட்டாளா்களின் விருப்பமிக்க நாடாக திகழ்கிறது. அதேபோல் தாங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை முறையான முதலீட்டுத் திட்டத்தில் (எஸ்ஐபி) சில்லறை வணிகா்கள் உள்ளிட்டோா் முதலீடு செய்கின்றனா். முதலீட்டாளா்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தி நிதிச் சந்தையில் ஏற்படும் அபாயங்களை தடுப்பது செபியின் கடமையாகும்.
எனவே, பங்குச் சந்தையில் நிகழும் நிதி மோசடிகளை தடுக்க செபிக்கு உதவும் வகையில் ஐசிஏஐ ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளது. இதற்காக நிபுணா் குழுவை அமைத்து செபியுடன் ஆலோசனை நடத்தி அந்த ஆய்வறிக்கையை சமா்ப்பிக்கவுள்ளோம் என்றாா்.
ஐசிஏஐயில் 4.35 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினா்களும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களும் உள்ளனா்.