உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்...
தேனி: இடப்பிரச்னையில் இருவர் வெட்டிக்கொலை; ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது - நடந்தது என்ன?
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் வசித்து வருபவர் சுந்தர் (55). இவர் வீட்டின் எதிர்ப்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (60). இருவருக்கும் கடந்த ஓராண்டாக இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் எதிர் வீட்டுக்காரர் ராஜேந்திரனின் மகன் பார்த்திபன்(31). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அவர் எதிர் வீட்டு குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பார்த்திபன் எதிர் வீட்டு குடும்பத்தாரை அரிவாளால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த எதிர் வீட்டுக்காரர் முத்துமாயன்(70) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் படுகாயம் அடைந்த சுந்தர் (55) மற்றும் அவரது மனைவி சுதா( 48 ) ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தமபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் பார்த்திபன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன் தாயார் விஜயா ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இடப் பிரச்சினையின் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.