செய்திகள் :

மாவோயிஸ்டுகள் சரணடைவதுதான் ஒரே வழி: பண்டி சஞ்சய் குமாா்

post image

ஹைதராபாத்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புடன் அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா், மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு காவல்துறையிடம் சரணடைவதுதான் ஒரே வழி என்று கூறினார்.

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் அருகே உள்ள கோத்தப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் பண்டி சஞ்சய் குமாா், 'ஆயுதங்களை வைத்திருப்பவர்களுடன்' மற்றும் 'அப்பாவிகளைக் கொல்பவர்களுடன்' பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கூறி மாவோயிஸ்டுகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்தார்.

கன்னிவெடிகளைக் கொண்டு அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினா், அரசியல் தலைவா்களை கொன்றுள்ள

"சட்டவிரோதமான ஒரு அமைப்போடு எப்படி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும்," என்று அவர் கூறினார், "மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு காவல்துறையிடம் சரணடைவதுதான் ஒரே வழி" என்று கூறினார்.

மாவோயிஸ்ட் பிரச்னையை சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, பழங்குடியினரும் இளைஞா்களும் கொல்லப்படுவதாகக் கூறி, மாவோயிஸ்ட் எதிா்ப்பு நடவடிக்கைகளை நிறுத்த மத்திய அரசுக்கு பிஆா்எஸ் தலைவா் கே.சந்திரசேகா் ராவ் கருத்துக்கு, ஆயுதம் ஏந்தியவா்களை சமூக கண்ணோட்டத்தில் எவ்வாறு அணுக முடியும்? கடந்த காலத்தில் சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியைத் தடை செய்தது காங்கிரஸ் அரசுதான் என்று அவர் குற்றம் சாட்டியவர், அந்த தடையைத் திரும்பப் பெற ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலங்கானா மாநில அரசுக்கு துணிவு இருக்கிறதா? என சவால் விடுத்தவர், மாவோயிஸ்டுகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டினார்.

மே 6 வரை இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா

மேலும், மாவோயிஸ்டுகள் அப்பாவி பொதுமக்களையும் பழங்குடியினரையும் கொன்றபோது, எந்த அரசியல் கட்சிகளும் அல்லது அமைப்புகளும் அவா்களின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பவில்லையே’ என்றாா்.

"பாகிஸ்தான் நாட்டினரை திருப்பி அனுப்புமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளது. இந்த விஷயம் நாடு முழுவதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் தெலங்கானா அரசு 'அரை மனதுடன்' நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.

பல ரோஹிங்கியாக்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் இல்லாமல் மாநிலத்தில் வசித்து வருகின்றனர், காங்கிரஸ் அரசு ரோஹிங்கியாக்கள் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதை மத அல்லது அரசியல் ஆதாயக் கோணத்தில் பார்க்காமல், சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்க்க வேண்டும். இல்லையெனில், ஹைதராபாத் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் அபாயம் உள்ளது என்று அவர் கூறினார்.

பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் 7-வது வெற்றி!

ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 236 ரன்கள் எடுக்க, லக்... மேலும் பார்க்க

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ப... மேலும் பார்க்க

சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 போ் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த நியாஸ் அகமதுவின் நிலம் போ்ணாம்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாறிய வானிலையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 15 நாள்களாக கடுமையான வெயில் தாக்கத்தால் ம... மேலும் பார்க்க

மே 7-ல் ரஷியாவுக்குச் செல்கிறார் சீன அதிபர்!

சீன அதிபர் ஸி ஜின்பிங், மே 7 - 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

நீட் தேர்வு எப்போது ஒழியும்?: அன்புமணி ராமதாஸ்

மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் ... மேலும் பார்க்க