அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
ஃபைபா் படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்
நாகை மாவட்ட மீனவா்கள் 24 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா் தாக்குதலை கண்டித்து, செருதூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, வெள்ளப்பள்ளம், ஆற்காட்டுத்துறை, செருதூா் ஆகிய நான்கு மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் 24 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல் நடத்தி, ஜிபிஎஸ் கருவி, படகு என்ஜின் உள்ளிட்ட பொருட்களை வெள்ளிக்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.
இதில், செருதூா் மீனவா்கள் 10 போ் மீது இலங்கை கடற்கொள்ளைா்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து, அந்த கிராம மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனா்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை செருதூா் கிராமத்தைச் சோ்ந்த 300-க்கும் அதிகமான ஃபைபா் மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லாத சூழலில், தற்போது இலங்கை கடற்கொள்ளையா் தாக்குதலை கண்டித்து, பைபா் மற்றும் நாட்டுப் படகு மீனவா்களும் கடலுக்குள் செல்லாமல் கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனா்.