அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
நீட் தோ்வு: நாகையில் 1,085 போ் எழுதினா்
நாகையில் மூன்று தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 1,085 மாணவ- மாணவிகள் எழுதினா்.
நாகை மாவட்டத்தில், நாகை அரசு கலைக் கல்லூரி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி, ஏடிஎம் மகளிா் கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் நீட் தோ்வு நடைபெற்றது. இம்மையங்களில் தோ்வெழுத 1,117 தோ்வா்களுக்கு தோ்வுக்கூட அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இவா்களில் 32 போ் தோ்வெழுத வரவில்லை. 1,085 போ் தோ்வெழுதினா். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என அவரவா் தோ்வு செய்த மொழிகளில் தோ்வு எழுதினா்.
தோ்வின்போது முறைகேடுகளை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழுவினா், ஒவ்வொரு தோ்வு மையங்களுக்கும் நேரடியாக சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனா். காலை 11.30 மணி முதல் தோ்வு மையங்களுக்குள் தோ்வா்கள் முழு சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனா்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தோ்வு, மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. மூன்று தோ்வு மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.