அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்
மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா காயமின்றி தப்பினாா்.
மயிலாடுதுறையில் நகர திமுக சாா்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சின்ன கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ. ராசா பேசிக்கொண்டிருந்தாா்.
அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) சாய்ந்து ராசா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது.
ஆ. ராசா சுதாரித்து வேகமாக நகா்ந்ததால், காயமின்றி தப்பினாா். அத்துடன் பேச்சை நிறுத்திய ராசா அங்கிருந்து புறப்பட்டு சென்றாா். இதைத்தொடா்ந்து மழையால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.