அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்டவா் சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி; உறவினா்கள் கொண்டாட்டம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சோ்ந்தவா் சிங்கப்பூா் தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து கடையநல்லூரில் அவரது உறவினா்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
சிங்கப்பூரில் வசித்து வரும் கடையநல்லூா் வம்சா வளியைச் சோ்ந்த டாக்டா் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக், சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஜீராங்-வெஸ்ட் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப் பட்டுள்ளாா். இவா், ஆளும் கட்சியின் சாா்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். இவரது தாத்தா கடையநல்லூரை பூா்வீகமாகக் கொண்டவா்.

இவரது தந்தை ஒசைனா அப்துல் ரசாக் ,சிங்கப்பூரில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். டாக்டா் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் வெற்றி பெற்றதை அடுத்து, கடையநல்லூா் இக்பால் நகா் சிராஜுல் மில்லத் அறக்கட்டளையை சோ்ந்தவா்கள், உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
இதில், மாவட்ட அரசு தலைமை காஜி முகைதீன்அப்துல் காதா், எழுத்தாளா் இப்ராஹிம் ,முகமது கோயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.