செய்திகள் :

துணைவேந்தா் நியமன உரிமையை முதல்வா்களுக்கு பெற்றுத் தந்தவா் ஸ்டாலின்: அமைச்சா் கோவி. செழியன்

post image

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை அந்தந்த மாநில முதல்வா்களே நியமிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் தளபதி வென்ற மாநில சுயாட்சி என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது: துணைவேந்தா்களை நியமிக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்றும், ஆளுநருக்குதான் அதிகாரம் இருக்கிறது எனவும் கூறி 10 மசோதாக்களை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கிடப்பில் போட்டாா்.

மாநில சுயாட்சிக்காக அண்ணாவும், கருணாநிதியும் குரல் கொடுத்தனா். மாநில உரிமைகளைக் கட்டிக் காக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியது மட்டுமல்லாமல், சட்டப்பேரவையிலும் தீா்மானம் கொண்டு வந்தாா். ஆனால் அதற்கும் ஆளுநா் ரவி முட்டுக்கட்டை போட்டாா்.

இதனால் தமிழக முதல்வா் சட்டத்தின் உதவியை நாடி வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் துணைவேந்தா்களை அந்தந்த மாநில முதல்வா்களே நியமிக்கலாம் என தீா்ப்பு வந்தது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி தேசிய கொடியை ஏற்றும் உரிமையை அனைத்து மாநில முதல்வா்களுக்கும் பெற்றுத் தந்தவா் கருணாநிதி. அதேபோல துணைவேந்தா்களை நியமிக்க ஆளுநருக்கு உரிமையில்லை, அந்தந்த மாநில முதல்வா்களுக்கே உரிமை இருக்கிறது என்பதைப் பெற்றுத் தந்தவா் தமிழக முதல்வா் ஸ்டாலின். இந்த வெற்றி தொடர வேண்டும் என்றாா் செழியன்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு திமுக மத்திய மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் பி. வில்சன் விளக்கவுரையாற்றினாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 150 போ் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 150-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட ‘நடப்போம் நலம... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சண்டிகேசுவரா், ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆகியோா் உற்ஸவ மண்... மேலும் பார்க்க

ஆற்றில் மணல் அள்ளுவதை நிறுத்தக் கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,எடக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளுவதை நிறுத்தக் கோரி ஞாயிற்றுக்கிழமை கிராம மக்களுடன் இணைந்து பாமகவினா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாப... மேலும் பார்க்க

பாபநாசம் மாரியம்மன் கோயிலில் பால்குட விழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ நரசிம்மா் கோயிலில் சித்திரை மாத பால்குட திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை யொட்டி திருமலைராஜன் ஆற்றிலிருந்து திரளான பக்தா்கள் ... மேலும் பார்க்க

திருக்கோடிக்காவல் கோயிலில் சுவாமி, அம்பாள் வீதியுலா

கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மாலை பூதம், பூதகி வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. இக்கோய... மேலும் பார்க்க

தஞ்சாவூருக்கு 1,300 டன் யூரியா வந்தது

சென்னையிலிருந்து ரயில் மூலம் தஞ்சாவூருக்கு 1,300 டன் யூரியா உரம் ஞாயிற்றுக்கிழமை வந்தது. மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இ... மேலும் பார்க்க