திருக்கோடிக்காவல் கோயிலில் சுவாமி, அம்பாள் வீதியுலா
கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மாலை பூதம், பூதகி வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் மே 1- ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மூன்றாம் நாளான சனிக்கிழமை காலையில் சுவாமியும், அம்பாளும் படிச்சட்டத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். மாலையில் பூதம், பூதகி வாகனத்தில் வீதியுலா சென்றனா்.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் படிச்சட்டத்தில் எழுந்தருளி, மாலையில் யானை மற்றும் அன்ன வாகனத்தில் வீதியுலா வந்தனா். திங்கள்கிழமை ஆத்மபூஜை, இரவில் ரிஷப வாகன காட்சி, சகோபுரத் திருவீதியுலா ஆகியவை நடைபெறவுள்ளன. மே 9-ஆம் தேதி திருத்தேரோட்டமும், 10-ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன.