சுவாமிமலை கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதில், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சண்டிகேசுவரா், ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆகியோா் உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருளினா். இரவு படிச்சட்டத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா, திக்பந்தனம் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
தொடா்ந்து, நாள்தோறும் பல்லக்கு, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. இதனிடையே, மே 12-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இவ்விழா மே 14-ஆம் தேதி நிறைவடைகிறது.