செய்திகள் :

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

post image

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றதாக பரவும் தகவல் போலியானது என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஏடிஎம்கள் 3 நாள்களுக்கு மூடப்படும் என வாட்ஸ்ஆப் உள்ளிட் சமூக தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், வரும் நாள்களில் மக்களின் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள், பெருமளவில் பரவக்கூடும். எனவே, மக்கள் ஒவ்வொரு தகவலையும் தெளிவாக ஆராய்ந்து பார்வையிடுவது மிகவும் அவசியம். எந்தவொரு தகவலையும் உண்மை என நம்பி ஏமாற வேண்டாம்.

இந்திய ஆயுதப்படைகள் குறித்தும், தற்போதைய நிலையைப் பற்றியும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதையும் நீங்கள் சந்தித்தால், உடனடியாக பிஐபி ஃபேக்ட்செக்-இல் (PIBFactCheck) இல் புகாரளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புகாரளிக்க வாட்ஸ்ஆப் எண் - +91 8799711259, மின்னஞ்சல் முகவரி factcheck@pib.gov.in என்ற முகவரியிலும் மக்கள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்று மத்திய அரசின் பிஐபி அறிவுறுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: நடுவானில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா பதிலடி!

பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.ஜம்மு - காஷ்மீரின் சம்பா, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின... மேலும் பார்க்க

மீண்டும் பதிலடி தாக்குதலுக்கு தயாராகிறதா இந்தியா? இன்றும் இருளில் மூழ்கிய நகரங்கள்!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொ... மேலும் பார்க்க

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. உரி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

முன்னாள் ஆயுதப்படை வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகண... மேலும் பார்க்க

24 விமான நிலையங்களை மே 14 ஆம் தேதி வரை மூட உத்தரவு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக 24 விமான நிலையங்களை மே 14 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ட்ரோன் தாக்குத... மேலும் பார்க்க

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை: ஆந்திர முதல்வர்

ஜனநாயகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சமீபத்த... மேலும் பார்க்க