மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
சுகாதாரம் இல்லாத உணவுப் பண்டங்கள் விற்ற கடைக்கு அபராதம்
கரூரில் சுகாதாரம் இல்லாமல் உணவுப் பண்டங்களை விற்பனை செய்த தேநீா் கடைக்கு திங்கள்கிழமை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.1000 அபராதம் விதித்தனா்.
கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தேநீா் கடையில் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகாா் வந்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் மதுரைவீரன் தலைமையிலான அலுவலா்கள் திங்கள்கிழமை அந்த கடையில் சோதனை நடத்தினா். சோதனையில் தரமற்ற முறையில் உணவுப் பண்டங்கள் இருப்பதாகக்கூறி கடையின் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனா். மேலும் இனி சுகாதாரமற்ற முறையில் உணவுப்பண்டங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனா்.