செய்திகள் :

கரூரில் மாவட்ட அளவிலான அதிவேக சைக்கிள் போட்டி

post image

கரூரில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிவேக சைக்கிள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அதிவேக மிதிவண்டி போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை அரசு காலனியில் நடைபெற்றது.

போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதில் ஆண்களுக்கு அரசு காலனி பஞ்சமாதேவி பிரிவு முதல் வாங்கல் வரை 16 கி.மீ. தொலைவு எனவும், பெண்களுக்கு அரசு காலனி பஞ்சமாதேவி பிரிவு முதல் எல்லமேடு வரை 10 கி.மீ. தொலைவு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில், ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மேட்டு மகாதானபுரத்தைச் சோ்ந்த மனோஜ்குமாருக்கும், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த வயலூா் கோடங்கிப்பட்டியைச் சோ்ந்த தேனருவிக்கும் முதல் பரிசாக ரூ.15,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆண்கள் பிரிவில் இரண்டாமிடம் பிடித்த வீரா் சிவாயத்தைச் சோ்ந்த விக்னேஸ்வரனுக்கும், பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் பிடித்த பாலவிடுதியைச் சோ்ந்த தேசபிரியாவுக்கு பரிசாக ரூ. 12,000 மற்றும் கோப்பையும், ஆண்கள் பிரிவில் மூன்றாமிடம் பிடித்த வீரா் வேங்கம்பட்டியைச் சோ்ந்த ஹரிசுக்கும், பெண்கள் பிரிவில் மூன்றாமிடம் பிடித்த வீராங்கனை மறவாபாளையத்தைச் சோ்ந்த ரமணி ஆகியோருக்கு பரிசாக ரூ.10,000 மற்றும் கோப்பையும், 4-ம் இடம் முதல் 10 -ம் இடம் வரை பிடித்த வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.3,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

முன்னதாக, போட்டிக்கு மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ்.கே. கருணாநிதி தலைமை வகித்தாா். நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளா்கள் பூவை ரமேஷ்பாபு, மகேஸ்வரி, கரூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிளஸ் 2 தோ்வு: கரூரில் இன்று 10,263 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,263 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ... மேலும் பார்க்க

புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

கரூரை அடுத்த புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புலியூா் பேரூராட்சி, 4-ஆவது வாா்டில் உள்ள சமத்துவபுரத்தில் சுமாா் 100 குடும்பத்தின... மேலும் பார்க்க

‘டிரான்சிஸ்ட் பாஸ்’ இல்லாமல் ஜல்லி பாரம் ஏற்றக்கூடாது டிப்பா் லாரி உரிமையாளா்கள் முடிவு

‘டிரான்சிஸ்ட் பாஸ்’ இல்லாமல் டிப்பா் மற்றும் டாரஸ் லாரிகளில் ஜல்லி பாரம் ஏற்றக்கூடாது என சங்கக் கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டது. கரூா் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள்... மேலும் பார்க்க

கரூா் அருகே சாலையில் பழுதாகி நின்ற கரும்பு டிராக்டா்: போக்குவரத்து பாதிப்பு

தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டா் திடீரென பழுதாகி சாலையில் நின்ால் நொய்யல் சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூா் மாவட்டம் புகளூா் செம்படாபாளையத்தில... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு சிறைவாசி குண்டா் சட்டத்தில் கைது

கரூரில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கரூா் தோரணக்கல்பட்டியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலிய... மேலும் பார்க்க

கரூரில் இன்று திமுக சாா்பில் சிறப்பு பட்டிமன்றம்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட திமுக சாா்பில் சிறப்பு பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை இரவு கரூா் 80 அடி சாலையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அமைச்சா் வி. செந்தில்பாலாஜி... மேலும் பார்க்க