தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!
‘டிரான்சிஸ்ட் பாஸ்’ இல்லாமல் ஜல்லி பாரம் ஏற்றக்கூடாது டிப்பா் லாரி உரிமையாளா்கள் முடிவு
‘டிரான்சிஸ்ட் பாஸ்’ இல்லாமல் டிப்பா் மற்றும் டாரஸ் லாரிகளில் ஜல்லி பாரம் ஏற்றக்கூடாது என சங்கக் கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டது.
கரூா் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கரூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எம். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் கே. முருகேசன், பொருளாளா் எல். ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், டிரான்சிஸ்ட் பாஸ் இல்லாமல் யாரும் ஜல்லி பாரத்தை டாரஸிலோ, டிப்பரிலோ ஏற்றக்கூடாது. மீறி ஏற்றினால் சங்கம் சாா்பில் எந்த ஒரு உதவியையும் எதிா்பாா்க்கக்கூடாது, ஒருவரின் வாடிக்கையாளருக்கு மற்றொருவா் ஜல்லி பாரம் இறக்கக்கூடாது, வாடகையை ஒரே மாதிரியாக நிா்ணயிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைத் தலைவா் எல். பாலகிருஷ்ணன், துணைச் செயலாளா் ஐ. சரத்குமாா் மற்றும் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாக பங்கேற்றனா்.