கர்நாடகம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி
கர்நாடகத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தின் நரகுண்டா வட்டத்தில் உள்ள ஹுனாசிகட்டி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அவர்கள் யமனப்பா மதரா(36), நிங்கப்பா கரியப்பா(45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர், மஞ்சுநாதகௌடா(40) ஹூப்ளியில் உள்ள கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நரகுண்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்குள்ளான வாகனத்தை அடையாளம் காண விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தகவல் தெரிந்தவர்கள் தாங்களாகவே முன் வந்து விசாரணைக்கு உதவுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.