ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
போக்சோ வழக்கு சிறைவாசி குண்டா் சட்டத்தில் கைது
கரூரில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கரூா் தோரணக்கல்பட்டியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பனை (31) கடந்த மாதம் 7-ஆம் தேதி கரூா் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் அவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் மாரியப்பனை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.