ஜாதவ்பூர் பல்கலை கலவரம்: அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் மீது வழக்குப்பதிவ...
தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் மாலை
திருச்சியில் எம்.கே. தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தாா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பின்புற நுழைவுவாயில் அருகே ஏழிசை மன்னா் எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மாா்ச் 1-ஆம் தேதி அவரது பிறந்த நாளையொட்டி அரசியல் பிரமுகா்கள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே. என். நேரு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வே.சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.