தொழிலாளி தற்கொலை
சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொழிலாளியான இவா், நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சித்தோடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.