பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து
டால்மியா பாரத் பவுண்டேசன் மூலம் 25 பேருக்கு பணி உறுதிக் கடிதங்கள்!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் அங்கமான டால்மியா பாரத் பவுண்டேசன் மூலம் வேலைக்கான பயிற்சி வழங்கி அதற்கான பணி உறுதிக் கடிதங்களை சிமெண்ட் ஆலையின் செயல் இயக்குநா் விநாயகமூா்த்தி வெள்ளிக்கிழமை வழங்கினா்.
டால்மியா சிமெண்ட் நிறுவன செயல் இயக்குநா் விநாயகமூா்த்தியின் வழிகாட்டுதலின்பேரில் டால்மியா பாரத் பவுண்டேசன் மூலம் செயல்படும் தீக்க்ஷா இலவச திறன் பயிற்சி மையத்தின் மூலம் இளைஞா்களுக்கு இலவச தையல் பயிற்சி, எலெக்ட்ரீசியன், பிளம்பா், சுகாதார உதவியாளா் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி கரூா் வைஸ்யா வங்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட கஸ்டமா் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மென்ட் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற 25 மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பணி உறுதிக் கடிதங்களை ஆலையின் செயல் இயக்குநா் விநாயமூா்த்தி, கரூா் வைஸ்யா வங்கியின் உதவி பொது மேலாளா் வைத்தியநாதன், அதிகாரிகள் வெங்கடேசன், காளிமுத்து ஆகியோா் வழங்கினா்.
நிகழ்வில் டால்மியா சிமெண்ட் ஆலை பொது மேலாளா் ஐ. சுப்பையா, டால்மியா பாரத் பவுண்டேசன் நிறுவனப் பொது மேலாளா் அஸ்வின்குமாா், டால்மியா நிறுவன துணைப் பொது மேலாளா் ரமேஷ்பாபு ஆகியோா் கலந்துகொண்டனா். நிகழ்வில் மாணவா்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பயிற்சி மைய மேலாளா் இளவரசி செய்தாா். துறை மேலாளா் நாகராஜன் நன்றி கூறினாா்.