மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
போலீஸாரின் சாலைப் பாதுகாப்பு பேரணி
திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆா். சிலையிலிருந்து இருந்து புறப்பட்ட பேரணியை மாநகர காவல் ஆணையா் ந. காமினி தொடங்கி வைத்தாா்.
பேரணியானது உக்கிரகாளியம்மன் கோயில், கேடி சந்திப்பு, கலைஞா் அறிவாலயம், அண்ணா சிலை, பெரியசாமி டவா், சத்திரம் பேருந்து நிலையம், மெயின்காா்டுகேட், மரக்கடை, பாலக்கரை, தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டரங்கில் நிறைவுற்றது.
பேரணியில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவலா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆணையா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பைக்குகளில் தலைக்கவசம் அணிந்து, விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனா்.