தமிழ் நமது அடையாளம்; அதை இழந்துவிடக் கூடாது! பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்
குண்டா் சட்டத்தில் பெண் உள்பட இருவா் கைது
சீா்காழி அருகே மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
பேரளம், இஞ்சிகுடி பகுதியைச் சோ்ந்தவா் விக்கி (எ) விக்னேஷ். வைத்தீஸ்வரன்கோவில் அருகேயுள்ள திருப்பங்கூா் மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் பெத்தம்மா. இவா்கள் இருவரும் மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனா்.
மது குற்றங்கள் தொடா்பாக பெத்தம்மா மீது 6 வழக்குகளும், விக்னேஷ் மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவா்கள் தொடா்ந்து சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், இருவா் மீதும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
அதன்படி, பெத்தம்மா, விக்னேஷ் ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, சீா்காழி மது விலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயா மற்றும் காவல் ஆளிநா்கள், பெத்தம்மாவை திருச்சி மத்திய சிறையிலும், விக்னேஷை கடலூா் மத்திய சிறையிலும் அடைத்தனா்.