செய்திகள் :

Mariyann Edgar Budde: ட்ரம்ப் முன்னிலையில் LGBTQ மக்களுக்காகப் பேசிய ஆயர் - யார் இந்த பெண்மணி?

post image

டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து வாஷிங்டன் பேராலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

வழிபாட்டை நடத்திய ஆயர் மரியான் எட்கர் புடே மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையயேயான மோதல், அமெரிக்க அரசியலில் பேசு பொருளாக உருவாகியிருக்கிறது.

யார் இந்த ஆயர் மரியான் எட்கர் புடே? தேவாலயத்தில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

Mariyann Edgar Budde

கிறிஸ்தவத்தில் பல விதமான கிளைகள் உள்ளன. 16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆங்கில சீர்திருத்தத்துக்குப் பிறகு சர்ச் ஆஃப் இங்கிலாந்தில் இருந்து பல பிரிவுகள் உருவாகின. அவற்றில் முக்கியமானது எபிஸ்கோபல் சர்ச் (Episcopal Church).

வாஷிங்டன்னில் உள்ள எபிஸ்கோபல் தேவாலயமான தேசிய தேவாலயம் ஃப்ரான்க் டி ரூஸ்வெல்ட் (1933) காலத்திலிருந்து அதிபர் பதவியேற்பு வழிபாட்டை நடத்திவருகிறது. பெரும்பாலான அதிபர்கள் இங்கு வழிபாட்டை நடத்தியுள்ளனர். மேலும் இது 'அரசியல் சார்பற்ற' தேவாலயமாகவும் இயங்கி வருகிறது.

Trump Vs Bishop Mariyann Edgar Budde

1970கள் முதல் எபிஸ்கோபல் தேவாலயத்தில் பெண்கள் மதகுருவாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். 1989ல் பார்பரா ஹாரிஸ் என்பவர் மாசசூசெட்ஸில் ஆயராக நியமிக்கப்பட்டார். பொதுவாக எபிஸ்கோபல் தேவாலயத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு மூன்று முதல் 5 நபர்கள் ஆலய கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் தேர்தல் மூலம் ஆயர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்படியாக 2011ம் ஆண்டு வாஷிங்டன் மறைமாவட்டத்தின் முதல் பெண் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மரியான் எட்கர் புடே.

வாஷிங்டன்னின் ஆயராக நியமிக்கப்படும் முன்னர் தூய யோவான் எஸ்பினோல் தேவாலயத்தில் 18 ஆண்டுகள் மதகுருவாக பணியாற்றினார்.

இவர் ரோச்செஸ்டர் பல்கலைகழகத்தில் முதுநிலை இறையியல் பட்டமும் வர்ஜீனியா இறையியல் செமினரியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இவர் How We Learn to Be Brave: Decisive Moments in Life and Faith (2023), Receiving Jesus: The Way of Love (2019) ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

சைக்கிளிங் பிரியரான இவருக்கு கணவர் (பவுல்), இரண்டு மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

WN Cathedral

ட்ரம்ப் முன்னிலையில் இவரது பேச்சைத் தொடர்ந்து இவருக்கு வலதுசாரி ஆதரவாளர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சிலர் இவர் சர்ச்சில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பியுள்ளனர்.

இவர் குறித்து ட்ரம்ப், "இவரது பிரசங்கள் சலிப்பூட்டுவதாக இருந்தது, ஊக்கமளிப்பதாக இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், "பிஷப் எனக் கூறப்படும் பேராலயத்தில் பிரசங்கம் நடத்திய பெண், தீவிர இடதுசாரி மற்றும் கடும்போக்கு ட்ரம்ப் வெறுப்பாளர்.

அவர் மோசமான முறையில் பேசினார், புத்திசாலித்தனமாக இல்லை... அவரும் அவரது தேவாலயமும் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்." என்றும் கூறினார்.

தேவாலயத்தில் நடந்தது என்ன?

பேராலயத்தில் நடந்த வழிபாட்டில் பிரசங்கத்தின்போது தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகள் வாழ்வுக்காகவும், குடியேறியவர்களுக்காகவும் பேசினார் மரியான் எட்கர் புடே.

வாஷிங்டன் தேசிய பேராலயத்தில் நடந்த வழிபாட்டில், "உங்களிடம் இறுதியாக ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன் மிஸ்டர் ப்ரெசிடெண்ட், மில்லியன் கணக்கான மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சமீபமாக நாட்டுமக்களிடம் உரையாடிய நீங்கள், அன்பு நிறைந்த நம் கடவுளின் பாதுகாப்பு கரத்தை உணருவதாகத் தெரிவித்தீர்கள்.

கடவுளின் பெயரால் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நம் நாட்டு மக்களிடம் நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும். இங்கு கே (Gay), லெஸ்பியன் (Lesbian) மற்றும் திருநங்கை குழந்தைகள் இருக்கின்றனர். ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி மற்றும் சுதந்திரமான குடும்பங்களிலும் இருக்கும் அவர்கள் தங்கள் வாழ்க்கை குறித்த அச்சத்தில் உள்ளனர்.

பேராயர் மரியான் எக்டர் புடே

நம் வயலில் பயிர்களை அறுப்பவர்கள், நம் அலுவலகங்களை சுத்தப்படுத்துபவர்கள், பண்ணைகளில் வேலை செய்பவர்கள், இறைச்சி உற்பத்தியில் பணியாற்றுபவர்கள், நாம் உணவகங்களில் சாப்பிட்ட பிறகு தட்டு கழுவுபவர்கள், மருத்துவமனைகளில் இரவு வேலை செய்பவர்களிடம் நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும். அவர்கள் அமெரிக்க குடிமக்களாக இல்லாமல் இருக்கலாம், உரிய ஆவணங்கள் வைத்திருக்காமல் இருக்கலாம்.

குடிபுகுந்தவர்களில் பெரும்பாலானோர் குற்றவாளிகள் அல்லர். அவர்கள் வரி கட்டுகின்றனர், நம் அண்டை வீடுகளில் வசிக்கின்றனர், நம் தேவாலயங்களில், மசூதிகளில், யூத ஜெப ஆலயங்களில், வதாராக்களில் மற்றும் கோவில்கலில் நம்பிக்கை மிக்க உறுப்பினர்களாக உள்ளனர்.

நம் சமூகத்தில் பெற்றோர்கள் நாடுகடத்தப்படுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும்.

தங்கள் தாய்நாட்டில் போர்களாலும் வன்முறைகளாலும் துன்பப்பட்டு பரிவையும் அரவணைப்பையும் நாடி இங்கு வருபவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும்.

நம் கடவுள் நாம் முன்பின் தெரியாதவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் எனக் கற்றுக்கொடுத்துள்ளார். நாம் எல்லாருமே ஒரு காலத்தில் இந்த மண்ணில் முன்பின் தெரியாதவர்களாக இருந்தவர்கள்தான்." என்றார்.

Trump 2.0: முதல்நாளில் அதிரடி காட்டிய ட்ரம்ப்!

பதவியேற்ற முதல் நாளிலேயே ட்ரம்ப் பல நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரது அதிரடியான உத்தரவுகள் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் வரவேற்கப்பட்டாலும், உலக அரசியல் அரங்கில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்காவுக்குள் குடியேறுபவர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்ததுடன், உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் இருப்பவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

மேலும் அமெரிக்காவில் இரண்டு பாலினங்களுக்கு மட்டுமே அனுமதி எனத் தெரிவித்துள்ளார் ட்ரம்ப். இதனால் LGBTQ+ மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

WHO -விலிருந்து வெளியேறுதல், உலக நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்தி வைத்தல், பைடன் ஆட்சியில் அரசுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தல், பெட்ரோலியம் எடுக்க அனுமதித்தல், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல் உள்ளிட்ட பல ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

ECR கலைஞர் பன்னாட்டு அரங்கம்: "அடிப்படை வாழ்வாதாரத்தை அழித்து அமைக்கக்கூடாது..." - சீமான் எதிர்ப்பு

``5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 525 கோடி செலவில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வ... மேலும் பார்க்க

Periyar: "சீமான் வியாபார நோக்கத்திற்காக இப்படிப் பேசுகிறார்..." - டிடிவி தினகரன் சொல்வதென்ன?

விருதுநகர் மாவட்ட சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசி... மேலும் பார்க்க

மக்களின் கோரிக்கை மனுக்கள் குப்பையில்... செந்தில் பாலாஜியைக் குற்றம்சாட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்ட அ.தி... மேலும் பார்க்க

வேங்கைவயல்: "கூட்டணியிலிருப்பதால் மௌனமாக இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை..." - கே.பாலகிருஷ்ணன்

புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மத்தியக் குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித... மேலும் பார்க்க

வேங்கை வயல்: "100க்கும் மேற்பட்ட சாட்சிகள், ஆவணங்கள், உரையாடல்கள்..." - தமிழக அரசு சொல்வதென்ன?

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் குரலெழுப்பி வரும் நிலையில் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. பட்டியலின ... மேலும் பார்க்க

`ஆளுநர் தேநீர் விருந்தை, தவெக தலைவர் விஜய் புறக்க ணிப்பது நல்லது' - துரை வைகோ எம்.பி!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தனியார் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.‌ இந்த விழாவில் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை அடுத்து துரை வைகோ ... மேலும் பார்க்க