செய்திகள் :

மக்களின் கோரிக்கை மனுக்கள் குப்பையில்... செந்தில் பாலாஜியைக் குற்றம்சாட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

post image

கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்ட அ.தி.மு.க கட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அப்போது, அந்தக் கூட்டத்தில், பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

"கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், ‘மக்களுடன் முதல்வர்’ என மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகின்றனர். அந்த மனுக்கள் எல்லாம் கோதூர் பகுதியில் உள்ள குப்பைக் காட்டில் வீசப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் பண்டல்களாகச் சேகரித்து அந்த துறை ரீதியான அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய நிலையில், குப்பைக் காட்டில் வீசப்பட்டுள்ளன. ஏழை மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களில், தையல் இயந்திரம் மற்றும் முதியோர் உதவித்தொகை வேண்டி பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் அவை” என்பதை அவர் குறிப்பிட்டதோடு, அவற்றை வாசித்தும் காண்பித்தார்.

அ.தி.மு.க பொதுக்கூட்டம்

மேலும், தொண்டர்கள் மத்தியில், அந்த கோரிக்கை மனுக்கள் அடங்கிய பண்டலைப் பொதுக்கூட்ட மேடையில் தூக்கிப்பிடித்து, “தி.மு.க ஆட்சியில் மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் குப்பையில் வீசப்படும் நிலை தான் உள்ளது” என்று குற்றம்சாட்டி பேசி முடித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியுமா? - கெஜ்ரிவால்

டெல்லி தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. தற்போது நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக ஆம் ஆத்மியை சாடுவதும், ஆம் ஆத்மி பாஜக மேல் குற்றம் சுமத்துவதும் அதிகமாகவும், பரபரப்பாகவும் நடந்துவருகிறது.இந... மேலும் பார்க்க

Trump: `அதிபரான டிரம்பினால் பகுதி நேர வேலையை விட்டு அல்லல்படும் மாணவர்கள்' - காரணம் என்ன?!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் 'எப்போது... என்ன சட்டம் கொண்டுவரப் போகிறார்?' என்று உலக நாடுகள் தொடங்கி அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் வரை ஒருவித பதற்றத்திலேயே இருந்து வருகின்றனர்.டிரம்ப் தன... மேலும் பார்க்க

"நாங்க ரெடி. .. வாங்க சந்திப்போம்!”-எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விட்ட செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை எதிரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சிறிய மாவட்டமாக இரு... மேலும் பார்க்க