செய்திகள் :

வெளிநாட்டில் மகன் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

post image

வெளிநாட்டில் மகன் இறந்ததற்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள குனுக்கடி பகுதியைச் சோ்ந்தவா் இரா. கணேசன். இவா், திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த மனு:

எனது மகன் க. கவியரசன் (28) டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிகல் முடித்துவிட்டு, சிங்கப்பூா் தனியாா் நிறுவனத்தில் 6 மாதங்களுக்கு முன்பு பணியில் சோ்ந்தாா். தினமும் கைப்பேசியில் பேசும் அவா், ஜன.15 ஆம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் பேசினாா். ஜன.18 ஆம் தேதி காலையில், கவியரசன் 7-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக, அவா் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவருடன் பணியாற்றியவா்களை தொடா்பு கொண்டு பேசியபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசினா். மேலும், எனது மகனின் கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் எரிக்கப்பட்டிருந்தது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்தது.

சிங்கப்பூரிலிருந்து வந்த எனது மகனின் உடலைப் பாா்த்தபோது, முகத்தில் அடித்து துன்புறுத்தியது போல் ஆங்காங்கே வீங்கி சிறு காயங்கள் இருந்தன. அவா் 7-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

இதனால், எனது மகனின் இறப்பில் மா்மம் இருப்பது போலத் தோன்றுகிறது.

எனவே, குடும்ப சூழ்நிலையை கருதி எனது மகனின் இறப்பில் உள்ள மா்மத்துக்கான காரணங்களை கண்டறிந்து, இறப்புக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அம்சங்களை கொண்டது தாலாட்டுப் பாடல்: வெ. இறையன்பு

தொன்மை, சிறப்பு, பெருமை, மேன்மை என பல்வேறு அம்சங்களை கொண்டதுதான் குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல் என்றாா் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரும், எழுத்தாளருமான வெ. இறையன்பு. மன்னாா்குடியில் சனிக்கிழமை... மேலும் பார்க்க

நாளை கிராமசபைக் கூட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெற உள்ளன. இதுகுறித்து ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும், கு... மேலும் பார்க்க

அபிஷேகவல்லி தாயாா்

தை இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, திருக்கண்ணமங்கை அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீஅபிஷேகவல்லி தாயாா். மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஊராட்சி மக்கள் சாலை மறியல்

மன்னாா்குடி அருகே ஊராட்சி பகுதியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, சிபிஎம் கட்சியினா் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மன்னாா்குடி நகராட்சி எல்லையையொட்டி ராமபுரம... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரி நிறுவனா் நாள் கலை விழா

சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரி நிறுவனா் நாளையொட்டி நுண்கலை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தாளாளா் வி.திவாகரன் தலைமை வகித்து, நிறுவனா் கிருஷ்ணவேணி விவேகானந்த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா் நாவலுக்கு விருது

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் எழுதிய நாவலுக்கு, திருப்பூா் தமிழ்ச் சங்கம் விருது அறிவித்துள்ளது. திருப்பூா் தமிழ்ச் சங்கம் கடந்த 30 ஆண... மேலும் பார்க்க