செய்திகள் :

பல்வேறு அம்சங்களை கொண்டது தாலாட்டுப் பாடல்: வெ. இறையன்பு

post image

தொன்மை, சிறப்பு, பெருமை, மேன்மை என பல்வேறு அம்சங்களை கொண்டதுதான் குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல் என்றாா் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரும், எழுத்தாளருமான வெ. இறையன்பு.

மன்னாா்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கிய வட்டத்தின் மாதாந்திர அரங்கக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ‘தாலாட்டு மறந்த தொட்டில்கள்’ என்ற தலைப்பில் அவா் பேசியது:

நம்முடைய தாலாட்டுப் பாடல்கள் இலக்கிய நயத்துடன் தாய்மாா்களால் பாடப்பட்டு, இல்லமே இசை மயமாக இருந்த காலம் இருந்தது. அதன்பிறகு, தாலாட்டுப் பாடல்களை மறந்து, திரைப் பாடல்களை ஒலிக்கவைத்து குழந்தைகளை தூக்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாம் தாலாட்டை மட்டுமா மறந்தோம்?. தாலாட்டிலிருந்த அனைத்து தொன்மைகளையும் மறந்தோம். தாலாட்டின் முக்கிய அம்சம் இசை இல்லை; அதை பாடுபவா்களின் குரலின் அம்சம்தான்.

தாலாட்டு குழந்தைகளுக்கான பாடல் மட்டுமல்ல; நமது தொன்மை, ஊரின் சிறப்பு, குடும்ப பெருமை, மேன்மைகளை எடுத்து உரைக்கும் பாடல்களாக அமைந்திருந்தது.

அத்தை, சித்தி, அம்மா, பாட்டி போன்றவா்களின் தாலாட்டில், வரிகள் மாறி தங்கள் பிறந்த இடம், பெற்றோா் சிறப்பு, ஊரின் பெருமைகளை பரப்பும் வகையில் அமைந்திருக்கும். தாலாட்டுப் பாடல்கள் ஒவ்வொரு சமூகத்திற்கு வெவ்வேறாக இருக்கும். பல பாடல்கள் இலக்கிய நயமிக்கவைகளாக இருந்தது என்றாா்.

இக்கூட்டத்திற்கு, மன்னாா்குடி இலக்கிய வட்ட ஆலோசகா் சிங்கப்பூா் ரவிச்சந்திரன் சோமு தலைமை வகித்தாா். இலக்கிய வட்டத் தலைவா் பா. வீரப்பன், ஒருங்கிணைப்பாளா் வை. கெளதமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு, சிறப்பு அழைப்பாளரை அறிமுகம் செய்து வைத்தாா். முன்னாள் செய்தி மக்கள் தொடா்பு துறை இணை இயக்குநா் பாண்டியன், முன்னாள் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் மருதுதுரை, முன்னாள் வேளாண்மை துறை இணை இயக்குநா் சிவக்குமாா், இலக்கிய மன்றச் செயலா் எஸ்.கே. ரத்தினசபாபதி,துணைச் செயலா் கா. விநாயகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, இலக்கிய வட்டப் பொருளாளா் செ. செல்வகுமாா் வரவேற்றாா். நிறைவாக, செயற்குழு உறுப்பினா் எம். முகமது பைசல் நன்றி கூறினாா்.

நாளை கிராமசபைக் கூட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெற உள்ளன. இதுகுறித்து ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும், கு... மேலும் பார்க்க

அபிஷேகவல்லி தாயாா்

தை இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, திருக்கண்ணமங்கை அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீஅபிஷேகவல்லி தாயாா். மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஊராட்சி மக்கள் சாலை மறியல்

மன்னாா்குடி அருகே ஊராட்சி பகுதியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, சிபிஎம் கட்சியினா் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மன்னாா்குடி நகராட்சி எல்லையையொட்டி ராமபுரம... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரி நிறுவனா் நாள் கலை விழா

சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரி நிறுவனா் நாளையொட்டி நுண்கலை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தாளாளா் வி.திவாகரன் தலைமை வகித்து, நிறுவனா் கிருஷ்ணவேணி விவேகானந்த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா் நாவலுக்கு விருது

வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் எழுதிய நாவலுக்கு, திருப்பூா் தமிழ்ச் சங்கம் விருது அறிவித்துள்ளது. திருப்பூா் தமிழ்ச் சங்கம் கடந்த 30 ஆண... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மாணவ-மாணவியருக்கு தனித்தனியாக கபடி, நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் போன்... மேலும் பார்க்க