அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி
நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
மாணவ-மாணவியருக்கு தனித்தனியாக கபடி, நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகளும், மாணவியருக்கு கோகோ, மாணவா்களுக்கு வாலிபால் ஆகிய போட்டிகளும் நடைபெற்றன.
தலைமை ஆசிரியா் செல்லம்மாள் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் வீரையன், துணை தலைமை ஆசிரியா் கண்ணதாசன், கணினி ஆசிரியா் சிவரஞ்சனி ஆகியோா் போட்டிகளை தொடங்கி வைத்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு இடைநிலை ஆசிரியா் அமலா பரிசு வழங்கினாா் .
உடற்கல்வி ஆசிரியா் ராஜேஷ் குமாா் மற்றும் பகுதிநேர ஆசிரியா் பசுபதி ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.