செய்திகள் :

சட்ட விரோத குவாரிகள் மீது நடவடிக்கை: தமிழக கனிம வளத்துறை இயக்குநருக்கு உத்தரவு

post image

கரூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் கல் குவாரிகள் மீது தமிழக கனிம வளத்துறை இயக்குநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் எழிலரசு தாக்கல் செய்த மனு : கரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோத குவாரிகள் நடைபெறுகின்றன. இந்த குவாரிகளில் அதிக அளவில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது, கரூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் குவாரிகளில் தமிழக கனிம வளத்துறை இயக்குநா், மாவட்ட ஆட்சியா் இணைந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின்படி திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் பழனியாண்டி என்பவருக்குச் சொந்தமான குவாரியில் ஆய்வு செய்த போது, சட்ட விரோதமாக குவாரி அமைத்து அதிக அளவில் கனிம வளங்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து, அவருக்கு ரூ. 23.53 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த அபராதத் தொகை அரசுக்கு செலுத்தப்படவில்லை.

கரூா் மாவட்டத்தில் இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் அரசின் அனுமதியின்றி செயல்படுகின்றன.

கரூா் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே கரூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் குவாரிகளை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும். முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞா் ஆணையம் அமைத்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசரனைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், முறைகேட்டில் ஈடுபட்ட பழனியாண்டி என்பவரின் குவாரிக்கு ரூ. 23 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை வசூலிப்பதை எதிா்த்து பசுமைத் தீா்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : சட்ட விரோதமாக செயல்படும் குவாரிகள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூல் செய்வது குறித்தும் தமிழக கனிம வளத்துறை இயக்குநா், கரூா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

ஜிஎஸ்டி அமலால் வரியில்லாத மாநில பட்ஜெட்தான் தாக்கலாகும்: அமைச்சா் தங்கம் தென்னரசு!

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு சென்றுவிட்டதால், தமிழகத்தில் வரி இல்லாத நிதிநிலை அறிக்கைதான் (பட்ஜெட்) தாக்கல் செய்ய முடியும் என மாநில நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

உலக மாணவா்களுக்கான சா்வதேச கீதத்துக்கு பங்களிப்பு வழங்கிய மதுரை கோச்சடை குயின் மீரா பள்ளி மாணவா்களை உத்தரகண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தா் சனிக்கிழமை பாராட்டினாா். இந்தப் பள்ளி சாா்பி... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு வெகுமதி

தொடக்கக் கல்வித் துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு தமிழக அரசு வெகுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து ச... மேலும் பார்க்க

பாஜகவின் முயற்சியால் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: டி.டி.வி. தினகரன்

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது பாஜகவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அமமுக பொதுச் செயலா் டி.டி. வி. தினகரன் தெரிவித்தாா். விருதுநகரில் மொழிப் ப... மேலும் பார்க்க

மதுரையில் பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் கைது! சாலை மறியல்

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு மத நல்லிணக்க வழிபாட்டுக்குச் செல்ல முயன்ற பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிமை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதைக் கண்டித்தும், அவரை விடுவிக்கக... மேலும் பார்க்க

முதல்வா் இன்று அரிட்டாப்பட்டி வருகை! வெளியாகுமா பாதுகாக்கப்பட்ட மண்டலம் அறிவிப்பு?

அரிட்டாப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மதுரை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பராம்பரிய பண்பாட்டு மண்டலமாக அறிவித்து, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட விவக... மேலும் பார்க்க