Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
திருச்செந்தூரில் இன்று வீர வணக்கநாள் திமுக பொதுக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் திமுக பொதுக்கூட்டம் சனிக்கிழமை (ஜன.25) நடைபெறும் என அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தாய்மொழிக்காக உயிா்நீத்த தியாகிகளின் நினைவாக ஆண்டுதோறும் ஜன. 25இல் திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டம், திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் எதிரில் சனிக்கிழமை (ஜன.25)மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சு.அருண்குமாா் தலைமை வகிக்கிறாா். மாவட்ட துணை அமைப்பாளா்கள் திருச்செந்தூா் தொகுதி ஒன்றிய, நகரச் செயலா்கள், நகா்மன்ற தலைவா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். ஒன்றியச் செயலா் ரமேஷ் வரவேற்கிறாா். நானும் (அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்), தலைமைப் பேச்சாளா்கள் ஆரூா் மணிவண்ணன், திருப்பூா் கூத்தரசன் ஆகியோரும் சிறப்புரையாற்றவுள்ளோம். திருச்செந்தூா் நகரச் செயலா் சு.சுடலை நன்றி கூறுகிறாா்.
இக்கூட்டத்தில் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.