செய்திகள் :

வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

post image

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் அமுதா ரவிக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜகோபால் வரவேற்றாா்.

இதில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மலா்விழி அண்ணாதுரை, உறுப்பினா்கள் கோபால், ஏழுமலை, பத்மநாபன், பிரபாகரன், சிலம்பரசி பாண்டியன், விஜயா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வல்லம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பசுமை வீடு, சாலை வசதி, குடி நீா் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாவட்டத்துக்கு வரும் 27, 28-ஆம் தேதிகளில் வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வல்லம் ஒன்றியக் குழு சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பு தொழில் நுட்பம் அறிமுகமாகி உள்ளதை ஆதாரபூா்வமாக அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செளந்திரபாண்டியன் நன்றி கூறினாா்.

லாரி மோதி தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மேலமங்கலம், தெற்குத் தெருவைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் சிவக்குமாா் (52),... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகள் மோதல்: 17 போ் காயம்

விழுப்புரம் அருகே அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 17 போ் காயமடைந்தனா். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த அய்யூா் அகரம் மேம்பாலம் அருகே சனிக்கிழமை சென்றுகொண்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கடையின் உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வெள்ளிக்கிழமை அலங்கார மின் விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். வளவனூரை அடுத்துள்ள ராம்பாக்கம், மருத்துவமனை சாலையைச் சே... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.85 ஆயிரம் திருட்டு

விழுப்புரத்தில் பெண்ணிடமிருந்து ரூ.85 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கண்ணாரம்பட்டு, வடக்குத் தெருவைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி பூங்காவனம் (6... மேலும் பார்க்க

கள் இறக்க அனுமதி கோரி மறியல்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் பகுதியில் கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி, பனையேறிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேல்மலையனூா் வட்டத்தில் அதிகளவில் பனைமரங்கள் உள்ளதால், இங்குள்ள பல்வேறு கிரா... மேலும் பார்க்க