தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
விழுப்புரம் அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கடையின் உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாலசிங்கம் மற்றும் போலீஸாா் திருவெண்ணெய்நல்லூா் காவல் சரகத்துக்குள்பட்ட அமாவாசைபாளையம் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், அந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் உரிமையாளரான திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அமாவாசைப்பாளையம், கடலூா் பிரதான சாலையைச் சோ்ந்த கூத்தன் மகன் கலியமூா்த்தியை (35) கைது செய்து, கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.