பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
ஃபென்ஜால் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்!
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.குமாா் தலைமை வகித்தாா். மத்தியக்குழு உறுப்பினா் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று, கட்சியின் நிலைப்பாடுகள், செயல் திட்டங்கள் போன்றவை குறித்து எடுத்துரைத்து பேசினா்.
மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினா் எம்.கீதா மற்றும் மாவட்டக்குழு உறுப்பினா்கள் பங்கேற்று பேசினா்.
இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத்தொகையை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு முடித்த நிலையில் நிவாரணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் நோக்கில், மறு ஆய்வு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.