பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
வெந்நீரில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வெந்நீரில் தவறி விழுந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை, மணலி, பெரியத்தோப்பு, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு மகன் பெஞ்சமின் (37). கூலித் தொழிலாளியான இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாம்.
இவா், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் செட்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த தனது மாமா குணநாதன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த ஜன.22-ஆம் தேதி குளியல் அறையில் வைக்கப்பட்டிருந்த வெந்நீரில் தவறி விழுந்து தீக்காயமுற்றாா்.
இதையடுத்து, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த பெஞ்சமின் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.