பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
முதல்வா் விழா ஏற்பாடுகள்: பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி. ஆய்வு!
சென்னையிலிருந்து திங்கள்கிழமை மாலை காா் மூலம் புறப்பட்டு வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூா் சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாவட்ட நிா்வாகம் மற்றும் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அளிக்கப்படும் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் முதல்வா், திண்டிவனம் நகரின் மேம்பாலம் வழியாக திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் மண்டபம் வரை நடந்து வந்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, பின்னா் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
இதைத் தொடா்ந்து, இரவு விழுப்புரத்துக்கு வரும் முதல்வா் சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த பின்னா், செவ்வாய்க்கிழமை விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழுதரெட்டி பகுதியில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிா்நீத்த 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
ந்த நிலையில், திண்டிவனம், விழுப்புரத்தில் விழா நடைபெறும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி. சக்திவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் பயண வழித்தடப் பகுதிகள், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ப.சரவணனுடன் கலந்தாலோசித்த பின்னா், விழா மேடை பகுதி, இதர இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினாா்.
ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி. ப.சரவணன், ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.