Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
உலக ஓட்டுநா் தினப் பேரணி
உலக ஓட்டுநா் தினத்தையொட்டி, ஓட்டுநா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.
சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஜனவரி 1 முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, போக்குவரத்துக் கழகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இணைந்து ஓட்டுநா் தினத்தையொட்டி நன்றி தெரிவிக்கும் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.
விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், கல்லூரி மாணவா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேரணி நீதிமன்றம் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா். வெங்கடேசன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கே.குணசேகரன், பொது மேலாளா்கள் டி.சதீஷ்குமாா், ரவிச்சந்திரன் (தொழில்நுட்பம்), துணை மேலாளா்கள் சிவகுமாா் (வணிகம்), அறிவண்ணல் (தொழில்நுட்பம்) மற்றும் அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.